பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் குப்பை சேமிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு

மணப்பாறை, செப்.25:  மணப்பாறை நகராட்சி ஆணையர் சுதாவிடம், நகர அமமுக செயலாளர் வக்கீல் மதிவாணன் தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட எடத்தெரு (ஜீவா தெருவில்) 12வது வார்டு பூங்காவிற்கு கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மணப்பாறை நகராட்சியின் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேமிப்பு கிடங்கு அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் சிறுவர்கள் பயிலும் பள்ளி வளாகமும், 11வது மற்றும் 12வது வார்டு எடத்தெரு, அண்ணாநகர் குடியிருப்பு வீடுகள் சுமார் 1000 வீடுகளுக்கு மேல் உள்ளது. இது தவிர மணப்பாறை நகராட்சி சார்பில் பூங்காவிற்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதி இதுவாகும். இந்த இடம் மணப்பாறையின் மையமாக உள்ளதால் இவ்விடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும், இப்பகுதியில் குடியிருப்போர்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் இந்த குப்பைக்கிடங்கை அமைக்காமல் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: