முசிறி பேரூராட்சியில் வரி சீராய்வு பணி அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

தா.பேட்டை, செப்.25:   முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டு வரி செலுத்தி வருவோர்களுக்கு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் உயர்வு செய்து அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பேரூராட்சி பகுதிகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல மதிப்புகளை முறையே ரூ. 1.20, 0.80 பைசா, 0.50 பைசா என உயர்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய மண்டல விபரங்கள் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அளவீடு செய்யப்பட்டு சொத்துவரிகளை அரசு வழிகாட்டுதலின்படி உயர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணிகளை செயல்படுத்த பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள், பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் அளவீடு செய்ய ஒத்துழைப்பு வழங்குவதோடு கட்டிட உரிமையாளர்கள் சுயமதிப்பீட்டு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் கட்டிட உரிமைதாரர்கள் வழங்காதபட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அளவை செய்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். டூ வீலர் மோதி விவசாயி பலி

துறையூர், செப்.25:  துறையூரை அடுத்த பச்சபெருமாள்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி (75). கீரிப்பட்டியில் உள்ள அவரது வயலுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு இருசக்கரவாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வேலம்பட்டி மாரியம்மன்கோவில் அருகில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம்மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்தியது விட்டு இரு சக்கர வாகனத்தில் தலைமறைவான கீழப்பட்டியை சேர்ந்த சரவணண் மகன் சீனிவாசன் (19) என்பவரை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: