எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் மேலரசூர் ஊராட்சியில் குடிநீர்தேக்க தொட்டி திறப்பு

லால்குடி, செப்.25:  லால்குடி அருகே மேல அரசூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் செலவில் தரைதள நீர் தேக்க தொட்டியை பயனாளிகளுக்கு எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மேலசூர் கிராமமக்கள் குடிநீர் பற்றாக்குறையை போக்க, கூட்டு குடிநீர் கிடைக்க குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என எம்எல்ஏ சவுந்தரபாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் மக்களுக்கு கிடைக்கும் வகையில் தரைதள குடிநீர் தேக்க தொட்டி மற்றும் பைப் லைன் மின் மோட்டார்அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
Advertising
Advertising

விழாவில் கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், சோமு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலரசூர் முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேலு நன்றி கூறினார். ஓய்வு பெற்ற காவலர்

நலசங்க நிர்வாகிகள் தேர்வுலால்குடி, செப்.25: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டார ஓய்வு பெற்ற காவலர் நலசங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் ராமலிங்கம் லால்குடி வட்டார பொறுப்பாளராகவும், மற்றும் ஆறுமுகம், ராஜகுரு, மாணிக்கம், தியாகராஜன், சந்தானலூயிஸ், ராமச்சந்திரன், நிர்வாகிகளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சியில் நடைபெற்ற 10ம் ஆண்டு ஓய்வு பெற்ற காவலர் நலசங்க துவக்க விழாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள லால்குடி வட்டார பொறுப்பாளர் ராமலிங்கத்திற்கு மாவட்ட தலைவர் நல்லசங்கி சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.

இதேபோல் தஞ்சை வல்லம் நேருஜி நகரை சேர்ந்த ஜோசப் ராஜா மனைவி ஆரோக்கிய விண்ணரசி (32) என்பவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சொந்த வேலை காரணமாக உறவினருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது பின்னால் ஹெல்மெட் அணிந்து மொபட்டில் வந்த மர்ம நபர்கள் பணப்பையை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து ஆரோக்கிய விண்ணரசி கொடுத்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: