அண்ணா பல்கலை மண்டல கிரிக்கெட் போட்டி

திருச்சி, செப்.25:  சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகம் சார்பில், 13வது மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 16, 17, 18, 19  ஆகிய நான்கு நாட்கள் திருச்சி ஜெ.ஜெ பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் இந்திரா கணேசன் கல்லூரி மைதானங்களில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 14 கல்லூரி அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் விளையாட ஜெ.ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சாரநாதன் பொறி யியல் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. இறுதி போட்டியில் ஜெ.ஜெ கல்லூரி அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சென்னை, அண்ணா பல்கலைக்கழக சாம்பியன் அணியாக திகழ்ந்து மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

Advertising
Advertising

Related Stories: