கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

பாபநாசம், செப். 25:  கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் 15வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம், கெங்காதரபுரம், மேலகபிஸ்தலம், கபிஸ்தலம் சான்றோர் தோப்புத் தெரு, பவுண்ட், காங்கேயன் பேட்டை, அக்கரைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் 800 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் வடிவேலன், உதவியாளர் சாந்தி பங்கேற்றனர்.

தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் எம்எல்ஏ துரை.சந்திசேகரன் கூறுகையில், சென்னை தலைமை செயலக பொதுப்பணித்துறை முதன்மை  செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, திருச்சி தலைமை  பொறியாளரை இன்று (நேற்று) நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.  விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது தான். ஒரு வாரத்திற்குள் கடைமடை  பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.  ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் புதிய கட்டளை  மேட்டுவாய்க்கால் கடை மடை விவசாயிகளை திரட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை  முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories: