×

குட்கா பொருள் விற்பனை செய்த 27 பேர்கள் மீது வழக்கு பதிவு

கரூர், செப்.25: கரூர் மாவட்டத்தில் குட்பா பொருள் விற்பனை செய்த 27 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் அனுமதியின்றி பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு 27 நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். தமிழகம் முழுதும் பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடைகளில அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கரூர் டவுன் எல்லையில் 3, பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லையில் 4, வெங்கமேடு பகுதியில் 4, வாங்கல் பகுதியில் 1, அரவக்குறிச்சியில் 1, குளித்தலையில 2, லாலாப்பேட்டையில் 2, மாயனூரில் 2, தோகைமலையில் 2, சிந்தாமணிப்பட்டியில் 3, பாலவிடுதி பகுதியில் 2 என மாவட்டம் முழுதும் 27 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதோடு, கடைகளில் விற்பனைக்காக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பான்பராக், புகையிலை போன்ற ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...