×

45 ஆண்டுகளுக்கு பிறகு அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார விழா

குளித்தலை, செப்.25: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹார விழா அக்டோபர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவதலங்களில் மிகவும் பிரசித்திபெற்று 1017 படிகள் உயரம் கொண்ட ரெத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாதங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா வெகுசிறப்பாக நடைபெற்று வந்தது. பல்வேறு காரணங்களால் இந்த விழா கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்து வந்தது.  இந்நிலையில் தற்போது அய்யர்மலை சூரசம்காரவிழா அறக்கட்டளை அறநிலைத்துறை சார்பில் விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்குமரன், அர்ச்சகர்கள், சிப்பந்திகள், சுவாமி தூக்குபவர்கள், தமிழ்தானிகம் (பூசாரி) மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில், 45 வருடங்களுக்கு பிறகு முதன் முதலில் வரும் அக்டோபர் 4ம் தேதி சூரசம்கார விழா முகூர்த்தகால் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து மலையிலிருந்து வள்ளி தேவசேனாசமேத சுப்பிரமணியசுவாமியை கீழே கொண்டு வந்து 7 நாட்கள் தினந்தோறும் மாலை சிறப்பு அபிஷேகம் நடத்தி பிறகு மலையை சுற்றி வந்து மீண்டும் கோயிலை அடைவது.  அக்டோபர் 13ம் தேதி சூரம்சம்கார விழா வானவேடிக்கையுடன் நடத்துவது. அக்டோபர் 14ம் தேதி மகாஅபிசேகம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசு வாமிக்கு திருக்கல்யாணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags :
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...