×

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் 28ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர், செப்.25: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 28ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஊராட்சி ஒன்றிய அளவிலான திறன் மேளா மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திறன் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள், பயிற்சிக்காக பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு கிராமப்புற வேலை நாடுனர்களை சென்றடையும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், திறன் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு 4 ஒன்றியங்களில் நடத்தப்பட்டது. தற்போது 5ம் கட்டமாக வரும் 28ம்தேதி (வெள்ளி) காலை 10மணி முதல் மதியம் 2மணிவரை கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் நடைபெற உள்ளது.

 முகாமில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, வங்கி நிதிசேவை மற்றும் காப்பீடு, சில்லரை வர்த்தகம், டிராக்டர் ஆபரேட்டர், பேசிக்சீவிங் ஆபரேட்டர், சீவிங்மிஷின் ஆபரேட்டர், டிடிபி பிரிண்ட் பப்ளிசிங் அசிஸ்டென்ட், கணினிபயிற்சி, அழகுகலை பயிற்சி, செல்போன்ஆபரேட்டர், தையல் மற்றும் எம்ப்ராய்டரிங், வாகன ஓட்டுனர், சமையல்கலை, உதவிசெவிலியர் பயிற்சி, அக்கவுண்ட்ஸ், டேலி போன்ற பல்வேறு பயிற்சிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெருக்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்க உள்ளனர்.

 பயிற்சி முடிவில் மத்தியஅரசு சான்றிதழுடன் தனியார் துறையில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28ம்தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள 8, 10ம் வகுப்பு, பட்டம், டிப்ளமோ, ஐடிஐ கல்வித் தகுதியுடையோர் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது