போலி ஆவணம் மூலம் 10 கோடி நிலம் அபகரித்த தந்தை, மகன் பிடிபட்டனர்

சென்னை: புழல் அருகே போலி ஆவணம் மூலம் 10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ் சில  நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வட்டம் புழல் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 10 கோடி மதிப்புள்ள 8.06 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சென்னை  சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் நாயக்கர் தெருவை சேர்ந்த  சுபராஷ் சந்த்(66), அவரது மகன் ரமேஷ் (35) ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக தொவித்திருந்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சுபராஷ் சந்த் மற்றும் அவரது மகன் அசோக்குமார் ஆகியோர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பூர்விக நிலம் போல் போலியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி அதன் மூலம் நிலத்தை அபகரித்து தெரியவந்தது.  அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுபராஷ் சந்த் மற்றும் அவரது மகன் அசோக்குமார் ஆகியோரை  கைது செய்தனர்.

Related Stories: