பூங்கா தெரு விளக்குகளை சீரமைக்க உத்தரவு: மாநகராட்சி அதிகாரிகள் சுற்றறிக்கை

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியாக சென்னையில் அனைத்து பூங்காக்களில் உள்ள தெரு விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். சென்னை கொடுங்கையூரில் உள்ள காந்தி தெருவில் கடந்த திமுக ஆட்சியில்  மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதிகாரிகள் பூங்காவை பராமரிக்காமல்  விட்டுவிட்டனர். இதனால் இங்குள்ள பல உபகணரங்கள் சேதம் அடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்து அதில் உள்ள வயர்கள் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தன. இதனால் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள்  பூங்காவிற்கு வந்து ெசல்ல அச்சப்பட்டனர்.

இதுதொடர்பான செய்தி புகைப்படத்துடன் நேற்றைய தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சென்னையில் அனைத்து பூங்காக்களில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்று  மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதனுடன் தினகரன் செய்தியையும் இணைத்து அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:  மண்டல பொறியாளர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி இளநிலை பொறியாளர்களை, பூங்காக்கள் மற்றும்  விளையாட்டு திடல்களில் உள்ள அனைத்து தெருவிளக்கு கம்பங்களையும்  மற்றும் ஆபத்தான நிலையில் தொங்கும் வயர்களையும் அப்புறப்படுத்தியும் சரி செய்தும் சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பூங்கா மின் கம்பங்களை நிறுவும் போது அதன் டெர்மினர் பாக்சுகளை படத்தில் காட்டியது போல் பாதுகாப்பான முறையில் உள்ள அடங்கியவாறு கட்டுமான பணிகளை செய்து கம்பங்களை நிறுவுமாறு  அறிவுறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணியினை உடனுக்குடன் மின்சார துறையின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: