×

இளையான்குடியில் வைகை வரவில்லை ...அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இளையான்குடி, செப்.25:    இளையான்குடி  கண்மாய்க்கு வைகை தண்ணீ திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளையான்குடி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பெரிய கண்மாய். கண்மாய் மூலம் 1300 ஏக்கர் பயன்பெற்று வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கண்மாய் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. கருவேலமரக்காடக
மாறியுள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருலே மரங்களை அகற்ற ேவண்டும். வைகை தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த மாதம் விவசாயிகள்  மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இயற்கை கூட்டமைப்பு தலைவர் காசிம், மஜக நகரச் செயலாளர் உமர்கத்தாப், மஜக மாநிலச் செயலாளர் சைபுல்லாஹ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராவுத்தர்நெய்னார், திமுக நகரச் செயலாளர் நஜிமுதீன்,  மமக மாவட்டத் தலைவர் துல்கருனைசேட், தியாகி இமானுவேல் பேரவை இளைரணி அமைப்பாளர் புலிபாண்டியன், எஸ்டிபிஐ நகர்தலைவர் அமீர்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்