×

போதை பொருட்களால் சீரழியும் மாணவர்கள்

மண்டபம், செப்.25: மண்டபத்தில் களைகட்டும் கஞ்சா விற்பனையால், பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாதை மாறி வருகின்றனர்.மண்டபம் பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை சகஜமாக நடத்து வருகிறது. ரயில் நிலையம் மற்றும் கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடக்கிறது. புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்க தடை இருந்தும் தற்போது மண்டபம் பகுதியில் எந்தவிதமான தடையும் இல்லாமல் அதிகாரிகள் துணையுடன் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதை மாறி வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத விற்பனை தொடர்ந்தாலும் போலீசார் பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் மண்டபம் ரயில் நிலைம் அருகே கஞ்சா விற்பனை 24 மணி நேரமும் நடந்து வருகிறது. தற்போது கஞ்சா பழகத்திற்கு மாணவர்கள் அதிகளவில்அடிமையாகி பள்ளி மற்றும் கல்லுரிக்கு செல்லாமல் கஞ்சா குடித்துவிட்டு கடற்கரை ஓரத்தில் சுற்றி திரிகின்றனர். இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் நிலையுள்ளதால், மாணவர்கள் எதிர்காலம் கோள்விக்குறியாகி விடுகிறது.
இதுகுறித்து மண்டபம் பகுதி மக்கள் கூறும்போது, மண்டபம் பகுதியில் 24 மணி நேரமும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையுள்ளது. காவல் துறை மண்டபம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மண்டபம் பகுதியில் தடைசெய்யபட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.



Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...