×

குன்றக்குடி வேளாண் நிலையம் அசத்தல் : சிறந்த அறிவியல் நிலைய விருது

காரைக்குடி, செப்.25:  குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த அறிவியல் நிலையத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் கூறுகையில், ‘‘வேளாண் அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் தென்னிந்திய வருடாந்திர கருத்தரங்கு ஐதராபாத்தில் நடந்தது. இதில் 72 வேளாண் அறிவியல் நிலையங்களின் தலைமை விஞ்ஞானி மற்றும் தலைவர்கள் வேளாண் அறிவியல் நிலையங்களின் பணிகளை உயர்மட்ட குழுக்களின் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்திற்கான குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பணிகள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூன்றாம் நாள் முடிவில் தேர்வு செய்யப்பட்டது. இதில் 72 வேளாண் அறிவியல் நிலையங்களில் 6 வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும், சேலம் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதை குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் இரண்டாவது முறையாக பெறுகிறது’’ என்றார்.

Tags :
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது