காளவாசல்-தேனி மெயின் ரோட்டில் பாதசாரி நடைமேடை அமைக்க கோரிக்கை

மதுரை, செப். 25: காளவாசல்-தேனி மெயின்ரோட்டில் பாதசாரிகளுக்கு நடைமேடை வசதியில்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரையில் அரசரடி, புதுஜெயில் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும், தேனி பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் பழங்காநத்தம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் காளவாசல் சந்திப்பை கடந்து செல்கின்றன.

இந்த சந்திப்பிலிருந்து தேனி மெயின் ரோடு, பிபிசாவடி ேராட்டில் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைக்கப்படவில்லை. சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களை நிறுத்துவதால், பாதாசாரிகள் ரோட்டில் நடக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் ரோட்டு நடுவில் கான்கீரிட்டிலான சென்டர் மீடியன்களை அமைத்துள்ளனர். சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கான சாலை அகலம் குறைந்துள்ளது. இந்தப் பகுதியை கடக்கும் வாகனங்கள் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டியுள்ளது. நடைமேடை அமைக்காமல் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். எனவே, சாலையின் இருபுறமும் நடைமேடை அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம்’ என்றனர்.

Related Stories: