தேசிய திறனறி தேர்வில் 1,531 பேர் பங்கேற்பு

மதுரை, செப். 25:  மதுரை மாவட்டத்தில் நடந்த தேசிய திறனறி தேர்வில், ஆயிரத்து 531 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அதிக மதிப்பெண் பெற்று எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்காக, தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்கத்ெதாகையாக ஆண்டுதோறும் நிதி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிகேஎன். பள்ளி, மதுரை மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரைக்கல்லூரி மேல்நிைலப்பள்ளி ஆகிய இடங்களில் நேற்று தேசிய திறனறித் தேர்வுகள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக நடந்த இத்தேர்வில், பங்கேற்க பதிவு செய்தவர்களில் ஆயிரத்து 531 பேர் தேர்வை எழுதினர். தேர்வுக்கு 273 பேர் வரவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ், தேர்வுக்குரிய மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: