பாப்பான்குளத்தில் சுகாதார வளாகம் திமுக எம்எல்ஏ திறந்துவைத்தார்

உடுமலை, செப். 25: மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமப்பட்ட மக்கள் கழிவறை கட்டி தரும்படி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் கழிவறை கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், இந்த கிராமத்தில் கழிவறை கட்ட தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6.50 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து, 8 கழிவறை, முதியோருக்கான வசதியுடன் ஒரு கழிவறை, ஒரு குளியலறை என 10 அறைகளுடன் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இந்த சுகாதார வளாகத்தை ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ., நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கணேசன், மாவட்ட திமுக பொருளாளர் முபாரக்அலி, ஊராட்சி செயலர் ஆண்டமுத்து, திமுக நெசவாளர் அணி நிர்வாகி செந்தில்குமார்,  ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரசாமி, ஒன்றிய துணை செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: