×

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

உடுமலை, செப். 25:  உடுமலை அருகே உள்ள நரசிங்காபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கிராமம் உள்ளது.
அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பக்கத்து கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் நரசிங்காபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் நரசிங்காபுரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடை மேற்கூரை இல்லாமல் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதன்பிறகு புதுப்பிக்கப்படவில்லை.
இதனால் கடும் வெயிலில் மாணவ மாணவிகள், பெண்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மழை பெய்தாலும் ஒதுங்க வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். நிழற்குடை இருந்தும் பயனில்லாத நிலை உள்ளது.
இதுபற்றி மைவாடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுமக்கள் சிரமத்தை போக்க, நரசிங்காபுரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையில் உடனடியாக மேற்கூரை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ