அவினாசியில் 106 மி.மீ., மழை

திருப்பூர், செப்.25: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 197.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக அவினாசியில் 106 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால் காங்கயம், பொங்கலூர், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் மழைநீர் நிரம்பி வருகிறது. நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளதால் கிணற்றுப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: திருப்பூரில் 28 மி.மீ.,, பல்லடம் 17 மி.மீ., காங்கயம் 4 மி,மீ., அவிநாசி 106 மி.மீ., தாராபுரம் 16 மி.மீ., மூலனூர் 21 மி.மீ., உடுமலை 5.40 மி.மீ., என மொத்தம் 197.40 மி.மீ., மழை பதிவு ஆகியுள்ளது. சராசரி 28.20 மி.மீ., ஆகும்.

Related Stories: