×

கால்வாய் கரையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

உடுமலை, செப். 25: உடுமலையில் அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய், ராமகுளம், கல்லாபுரம் கால்வாய்கள் பாசன பகுதிக்கு செல்கின்றன. இந்த கால்வாய்களின் ஓரத்தில் உயர்ந்து வளர்ந்த பழமையான யூகலிப்டஸ் மரங்கள்  உள்ளன.
பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த மரங்கள் லேசாக அடிக்கும் காற்றுக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து விழுகின்றன. இந்த மூன்று கால்வாய் ஓரங்களிலும் ஏராளமான மரங்கள் விழுந்து கிடக்கின்றன.வாய்க்காலின் உள்பகுதி, தோட்டத்து சாளை, கால்வாயின் மேற்பகுதி என பல இடங்களில் விழுந்து கிடக்கிறது. கால்வாயை ஒட்டிய பகுதியை விவசாயிகள் வண்டித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். அமராவதி நகர் பகுதியில் உள்ள தோட்டசாளைகளுக்கு டிராக்டர், சரக்கு வாகனம், மாட்டு வண்டி போன்றவற்றில் செல்லும் விவசாயிகள் கால்வாய் ஓர வண்டிதடத்தை பயன்படுத்துகின்றனர். மாலை 7 மணிக்கு பிறகு, அமராவதி அணை பகுதியில் உள்ள செக்போஸ்ட்டை மூடிவிடுவதால் விவசாயிகளுக்கு இந்த வழித்தடம் வசதியாக உள்ளது.
ஆனால் மரங்கள் விழுந்து கிடப்பதால், விவசாயிகள் செல்ல முடியவில்லை. வாய்க்காலில் விழுந்து கிடக்கும் மரங்களால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. இவற்றை வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்