×

ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 5பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி,செப்.25:  கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, சூலூர் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி திமுக சார்பில், அப்போதைய கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தமிழ்மணி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 இந்நிலையில், இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மணி , மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரஸ்மணி மற்றும் சுரேஷ்குமார், மதிமுக கருணாநிதி, கம்யூனிஸ் கட்சி ஜோதிபாசு ஆகிய 5 பேர் மீது, கோவை ஜேஎம்1 கோர்ட்டில் ரயில்வே போலீசார் வழக்கு தொடர்ந்தனர். பின், 24ம் தேதி(நேற்று) கோர்ட்டில் ஆஜராக கோரி  கடந்த சில நாட்களுக்கு முன்பு, 5 பேருக்கும் ரயில்வே போலீஸ் மூலம் சம்மன் அனுப்பியது.  இதையடுத்து நேற்று, திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அவர்களுக்கு, குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
திமுகவினர் ஆஜராக வந்தபோது, சூலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் வக்கீல் தேவசேனாதிபதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதிமுருகேசன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், சூலூர் ரமேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சூலூர் சுரேஷ், இலக்கிய அணி ராதாகிருஷ்ணன், வக்கீல் விஸ்வநாதன், மயில்வாகனன், தாமு, தமிழரசு, இருகூர் சுப்பிரமணியம், மதுக்கரை தேவராஜ், வக்கீல் சிவக்குமார், ரவிசந்திரன், பாலசுப்பிரமணியம், கிதியோன்சுரேஷ்  உள்ளிட்ட பலர் இருந்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில்

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு