அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய கஞ்சப்பள்ளியை சேர்ந்த குணசேகரன் (30), ஆனந்த் (41) ஆகியோரை கைது செய்தனர். கோவை டி.பி.சாலையில் மாதிரிசாலை திட்டப்பணி துவக்கம்

கோவை, செப். 25:  மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி பகுதியில் மாதிரி சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

மொத்தம் ஆறு இடங்களில் மாதிரி சாலை அமைக்க மாநகராட்சியால் திட்டமிடப்பட்டது. இதில் முதல்கட்டமாக, ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் மாதிரி சாலை அமைக்க ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னர், அரசு ஒப்புதலை பெற்று டி.பி.ரோட்டில் மாதிரி சாலை அமைக்கும் திட்டப்பணி கடந்த ஜூலை மாதம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த மாதிரி சாலையில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்ப உரிய அகலத்துடன் கூடிய நடைபாதைகள், டெலிபோன் ஒயர்கள், மின்சார ஒயர்கள், கேபிள் ஒயர்கள் போன்றவை சாலையில் கம்பம் அமைத்து கொண்டு செல்லாமல், சாலையின் ஓரம் டணல் போல் அமைத்து கொண்டு செல்லப்பட உள்ளது.  இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்கள் அமர ஸ்மார்ட் பெஞ்ச் ஏற்படுத்துதல், இதில் இலவச வை-பை வசதி, மின்சார வசதி போன்றவை ஏற்படுத்துதல், ஒளிரும் டிஜிட்டல் வடிவிலான அறிவிப்பு பலகைகள் பொருத்துதல், சாலைகள் தரமான முறையில் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நகரில் உள்ள மற்ற சாலைகளுக்கு முன்மாதிரியாக இந்த சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 அமைச்சர் துவக்கி வைத்த பின்னர், சில காரணங்களால் உடனடியாக மாதிரிசாலைகள் பணிகள் துவங்கப்படவில்லை. வரைபடத்திலும் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.பி.சாலையில் மாதிரிசாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 1.80 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதிரிசாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக டி.பி.சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குழி தோண்டப்பட்டுள்ளது. சாலையின் அமைப்பு, மண் பரிசோதனை, பாதாள சாக்கடை குழாய்கள், நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய், தொலைதொடர் கம்பிகளின் கட்டமைப்பு ஆகியவற்றை ெபாறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு பின்னர், மாதிரி சாலை அமைப்பதற்கான பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: