×

அழுகிய வெங்காயத்துடன் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கோவை, செப். 25: போதிய விலை கிடைக்காததால், வயல்களில் இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெங்காயத்துடன்  கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
 கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசீபுரம், போளுவாம்பட்டி, செம்மேடு, நல்லூர் வயல், ஆலாந்துறை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. வெங்காய பயிருக்கு ஒரு ஏக்கருக்கு நடவு, களை, தோண்டு கூலி என மொத்தம் ரூ45 ஆயிரம் முதல் 60ஆயிரம் வரை செலவாகிறது.  தற்போது அறுவடை காலத்தில் போதிய விலை கிடைக்காததால் சின்னவெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக வெப்பம், மற்றும் காற்றின்மை காரணமாக இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தில் அழுகல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நேற்று அழுகிய வெங்காயத்துடன் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் மனு அளித்தனர். அதில், ‘’வெங்கயம் அழுகியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடாக வழங்க வேண்டும், எனவும் சின்ன வெங்காயம் ஊக்குவிக்கும் வகையில் அரசு கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி தரவேண்டும்’’ எனக்கூறியுள்ளனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்