சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்ற கோரிக்கை

ஈரோடு, செப். 25:  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நம்பியூர் தாலுகா கெட்டிசெவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நம்பியூர் தாலுகா கெட்டிசெவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீலாம்பாளையம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள குடியிருப்பு பகுதியில் கணக்கன்தோட்டம் என்ற இடத்தில் தனிநபர் ஒருவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் கோழிகழிவுகளை அகற்றாமலும், இறந்த கோழிகளை அருகில் உள்ள பள்ளத்திலும் போட்டுள்ளார்.

   இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் ஈக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளரிடம் நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கோழிப்பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: