அரசு ஊழியர்கள், பணியாளர்கள் தமிழில் கையெழுத்திட கோரிக்கை

ஈரோடு, செப். 25:  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்கள்பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

 மக்கள் பாதை அமைப்பின் தலைவர் சகாயத்தை வழிகாட்டியாக கொண்டு இயங்கி வரும் மக்கள் பாதை அமைப்பு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற திட்டத்தின்கீழ் தமிழ் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அதன்படி தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழிலேயே இட வேண்டும்.

   ஆங்கிலம் தமிழர்களை மொழியால், உணர்வால் எண்ணத்தால் அடிமைப்படுத்துகிறது. இதனை மாற்றிட மக்கள்பாதை முயற்சி செய்து வருகிறது. அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகைகள், முத்திரைகள் முதலியன அனைத்தும் தமிழிலேயே அமைய வேண்டும். அரசு பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும். இந்த அரசாணைகளை அமல்படுத்த ஆணை பிறப்பிக்க

வேண்டும். மேலும் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவ, மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழில் தமிழில் கையொப்பமிட பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: