மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தியமங்கலம், செப். 25:  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 இதில் 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்த நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 2479 கனஅடியாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நேற்று காலை நீர்வரத்து 5572 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 99.20 அடியாகவும் நீர் இருப்பு 28.1 டிஎம்சி.,யாகவும் உள்ளது.அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 1050 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: