சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தேங்காய் நார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு, செப். 25:  ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளோடு அருகே ஞானிப்பாளையம், நடுப்பாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

 அந்த மனுவில் கூறியுள்ளதாவது:  ஈரோடு அருகே தென்முகம் வெள்ளோடு நடுப்பாளையம் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ஞானிபாளையம் வரட்டுமடைகாடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தேங்காய் நார் தொழிற்சாலையை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் தேங்காய் மட்டையில் இருந்து நார் மட்டும் உற்பத்தி செய்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக தேங்காய் நார் கழிவை சுத்தம் செய்து பித்து பிளாக் எனப்படும் நார் கழிவு கட்டிகளை ஏற்றுமதி செய்து வருகிறார். தேங்காய் நார் கழிவை சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் கொட்டி அதன் மீது தண்ணீரை அடித்து சுத்தம் செய்கின்றனர்.

  இவ்வாறு சுத்தம் செய்யும்போது கழிவுநீர் நிலத்தில் இறங்கி நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் குடிநீருக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். நிலத்தடி நீரை மட்டுமே கொண்டு விவசாயம் செய்து வரும் எங்களால் இந்த தொழிற்சாலையால் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கிறோம். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மேலும் மோசமான நிலை ஏற்படும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தேங்காய் நார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து குடிநீரையும், விவசாயத்தையும் காக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.  டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை: அந்தியூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பத்தி ஊராட்சி வெள்ளாளபாளையம் ரைஸ்மில் பிரிவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபாளையம் ரைஸ்மில் பிரிவு பகுதியில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்காக இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த டாஸ்மாக் கடை அருகிலேயே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளது. பொதுமக்களும் அதிக அளவில் வசித்து வருகிறோம்.

தற்போது இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை அமைப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்புகள் ஏற்படும். மேலும் பள்ளி மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும். மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் திறந்தால் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் கூறியுள்ளனர்.  பெருந்துறை ஒன்றிய பா.ஜ., சார்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: விஜயமங்கலம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் 2 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை அகற்றாமல் உள்ளனர்

Related Stories: