உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றிய பெண் யானை பலி தங்க காசு திருடிய டிரைவர் கைது

ஈரோடு, செப். 25:  ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (31). இவருக்கு மனைவி, மகளும் உள்ளனர். தினேஷ்குமார் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளர். இந்நிலையில், தினேஷ் குமார் மனைவி, குழந்தை நேற்று முன்தினம் காலை அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் தினேஷ் குமார் வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டின் சாவியை அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கார் சாவியோடு சேர்த்து வைத்துள்ளார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 18 பவுன் தங்க காசு மற்றும் லேப்டாப் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் வீட்டில் பொருத்தி இருந்த 2 சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பார்த்தார். அப்போது நிறுவனத்தில் சக டிரைவராக பணியாற்றிய ஈரோடு கிண்ணம் பாளையம் சிந்தனை நகரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் கமலேஷ் (26) என்பவர் வீட்டிற்குள் வந்து, நகைகளை திருடியது தெரியவந்தது.

  இதுகுறித்து தினேஷ்குமார் ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கமலேஷை பிடித்து நடத்திய விசாரணையில், தினேஷ்குமார் சக பணியாளர்களிடம் நகைச் சீட்டு போட்டு நகைகள் வாங்கி வீட்டில் சேர்த்து வைத்திருப்பதாக பெருமையாக பேசியுள்ளார்.

இதையறிந்த கமலேஷ், தினேஷ் குமாரின் கார் சாவியில் இருந்த வீட்டு சாவியை எடுத்துசென்று, அவரது வீட்டில் புகுந்து 18 பவுன் தங்ககாசு  மற்றும் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கமலேஷை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 18 பவுன் தங்க காயின் மற்றும் லேப்டாப்பினை பறிமுதல் செய்தனர்.

Related Stories: