×

பொதுமக்கள் அச்சமின்றி செல்ல கள்ளக்குறிச்சி பகுதியில் ரவுடியிசம் ஒழிக்கப்படும்

கள்ளக்குறிச்சி, செப். 25:     கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கோமதி விஜய
குமார் கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி ராமநாதன் இடமாறுதலாகி கள்ளக்குறிச்சி புதிய டிஎஸ்பியாக நியமனம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி புதிய டிஎஸ்பியாக ராமநாதன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் டிஎஸ்பி நிருபர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கல்வராயன்மலையில் சாராய ஊறல் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமனாலும் என்னை தொடர்பு கொள்ள
லாம். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து தக்க தீர்வு ஏற்படுத்தி கொள்ளவும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த காவல்நிலைய போலீசார் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்படும். கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி செல்ல ரவுடியிசம் ஒழிக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை