திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கலந்தாய்வு கூட்டம்

திண்டிவனம், செப். 25:  திண்டிவனம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடந்தது. திண்டிவனம் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பிரபு வெங்கடேஸ்வரன், பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, தீயணைப்பு அலுவலர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா மற்றும் பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குநர் வாசுதேவன் ஆகியோர்
Advertising
Advertising

வடகிழக்கு பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சொக்கநாதன், வருவாய் ஆய்வாளர்கள் செல்வக்குமார், அக்தர், கவிநிலவு, பிரசாத், விஜயபாஸ்கர், ஜெயந்தி உட்பட வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: