பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

உளுந்தூர்பேட்டை, செப். 25: உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வனவியல் விரிவாக்க அலுவலர் தர்மலிங்கம், திலீப், வெங்கடாஜலபதி ஆகியோர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் வின்சென்ட், முத்துராமன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: