கத்தியுடன் திரிந்த 3 ேபர் கும்பல் கைது: ஒருவர் தப்பியோட்டம்

காலாப்பட்டு, செப். 25: பெரம்பை - வில்லியனூர் சாலையில் கத்தியுடன் நின்றிருந்த 3 பேர் போலீஸ் ரோந்து பணியின்போது சிக்கினர். அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை - வில்லியனூர் சாலையில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமணி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பை சாலையில் 4 பேர் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்றபோது 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவர்களை சோதனையிட்டபோது அவர்களில் ஒருவர் பெரியளவிலான கத்தி வைத்திருந்தார்.தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர்கள் புதுவை வில்லியனூரை சேர்ந்த சரண்ராஜ் (19), பெரம்பையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (21), பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பரமசிவம் (18) எனவும், தப்பியோடியவர் பெரியகாலாப்பட்டை சேர்ந்த சுகன் (25) எனவும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்தது. அவ்வழியே வருபவர்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட முயன்றார்களா? அல்லதுவீடுபுகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டார்

களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர தப்பியோடிய சுகன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.கையில் கத்தியுடன் சாலையில் நின்றிருந்த 3 பேர் பிடிபட்ட சம்பவம் பெரம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: