உயிரியல் பாடப்பிரிவுக்கான மாப்-அப் கலந்தாய்வு 27ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி, செப். 25:  புதுச்சேரியில் ஆயுர்வேத மருத்துவம், பி.ஏ., எல்.எல்.பி., பி.பார்ம், உயிரியல் பாடப்பிரிவுகள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் இடங்களுக்கான மாப்-அப் கலந்தாய்வு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ம் தேதி நடக்கிறது.சுயநிதி இடங்கள்:  அதன்படி, காலை 9 மணிக்கு புதுச்சேரி மாநிலத்தவருக்கும், 9.30 மணிக்கு பிற மாநிலத்தவருக்கான பிஎஸ்சி விவசாயம் மற்றும் தோட்டக்கலை பாடப்பிரிவுக்கும், 10 மணிக்கு பிற மாநிலத்தவருக்கான கால்நடை மருத்துவ பாடப்பிரிவிலும் உள்ள சுயநிதி இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு பி.பார்ம், 11 மணிக்கு உயிரியல் பாடப்பிரிவில் உள்ள பிற மாநிலத்தவருக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.புதுச்சேரி ஒதுக்கீட்டு இடங்கள்: காலை 10.30 மணிக்கு  ஆயுர்வேத பாடப்பிரிவில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடங்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். மதியம் 12 மணிக்கு பி.பார்ம், 2 மணிக்கு உயிரியல் பாடப்பிரிவு, 4 மணிக்கு பிஎஸ்சி விவசாயம் மற்றும் தோட்டக்கலை, மாலை 5 மணிக்கு பி.ஏ., எல்.எல்.பி. ஆகிய பாடப்பிரிவில் உள்ள புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் காலியிடங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வாய்ப்

பிருந்தால் இடங்களை பெறலாம். ஒரு பாடப்பிரிவில் சீட் எடுக்கும் மாணவர்கள் மற்ற பாடப்பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. மேலும், மாப்-அப் கலந்தாய்வில் சீட் எடுக்கும் மாணவர்கள் 29ம் தேதிக்குள் தொடர்புடைய கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும். இத்தகவலை ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

Related Stories: