×

பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காலாப்பட்டு, செப். 25:  புதுவை பொறியியல் கல்லூரியை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். இதற்காக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இதனை புதுவை அரசும், பொறியியல் கல்லூரி நிர்வாகமும் துரிதப்படுத்த வேண்டும். காலதாமதமாகும் பட்சத்தில் பொறியியல் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படியும், அதற்குண்டான நிலுவை தொகையும் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 26ம் தேதி வரை புதுவை பொறியியல் கல்லூரி பாரதிய ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாலை  புதுச்சேரி பொறியியல் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது. சங்க செயலாளர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் சபாபதி, வீரப்பன், ஐயப்பன், ஐயனாரப்பன் ஆகியோர் கலந்து ெகாண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...