சுல்தான்பேட்டையில் ரூ.1 கோடியில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி

வில்லியனூர், செப். 25:  வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து மூலமாக சாலை மற்றம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக எம்எல்ஏ நிதி மற்றும் நகர அமைப்பு குழுமம் நிதியின் கீழ் சுமார் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுல்தான்பேட்டை புதுமேட்டுதெரு, பிஸ்மி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தார்சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், ஏபிஆர் சாலை விரிவாக்கத்திற்கு மண் அடித்து கருங்கல் ஜல்லியிட்டு சாலை அமைத்தல், அஞ்சுமன் தெரு முதல் அரசூர் வரை யு வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைபொறியாளர் சத்தியநாராயணன் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: