×

மீனவர் நலத்துறை ஆபீசை படகு உரிமையாளர்கள் முற்றுகை

புதுச்சேரி, செப். 25:  புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படாததை கண்டித்து 18 கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பர
பரப்பு ஏற்பட்டது. புதுவை, தேங்காய்திட்டு பகுதியில் செயல்படும் மீன்பிடி துறைமுகம் தூர் வாரப்படாததை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி துறைமுக முகத்துவாரம் சில மாதங்களாக ஆழப்படுத்தாததை கண்டித்து 15 நாளாக தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 18 கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு, பைபர் மற்றும் கட்டுமர படகு உரிமையாளர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முகத்துவாரம் தூர்வாரப்படாததால் 300க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பலகோடி ரூபாய்வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். ேமலும் இதுதொடர்பாக அதிகாரிகள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாதற்கு தங்களது ஆதங்கத்தை பதிவு செய்ததோடு முகத்துவார பகுதியில் 500மீ நீளத்திற்கு கருங்கற்களை கொட்ட வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டனர். மேலும் தங்களது கோரிக்கையை மீனவர் நலத்துறை நிறைவேற்றாவிடில் 18 மீனவ கிராம மக்களையும திரட்டி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். முன்னதாக தேங்காய்திட்டு துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட விசைப்படகு உரிமையாளர்கள் தரப்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுஇருந்தது. அவர்கள் துறைமுக வளாகத்திற்குள் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் நுழைவு வாயில் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டுமென அறிவுறுத்தினார். இதையடுத்து மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பணிக்கு செல்ல முடியாமல் இளநிலை பொறியாளர் தெய்வசிகாமணி மற்றும் ஊழியர்கள் நீண்டநேரமாக பரிதவித்தனர். இதுபற்றி மீனவர் நலத்துறை இயக்குனர் முனுசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்படவே போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...