சோனகன்விளை பிரம்மசக்தி, சுடலை மாடசுவாமி கோயிலில் இன்று கொடைவிழா

நெல்லை, செப். 25: சோனகன்விளை திருமலையப்பபுரம் பிரம்மசக்தி அம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா இன்று (25ம் தேதி) விமரிசையாக நடக்கிறது. திருச்செந்தூர் அடுத்த சோனகன்விளையில்  பிரம்ம சக்தி அம்மன் சுடலை மாடசுவாமி உள்ளது. இக்கோயிலில் மந்திரமூர்த்திசுடலை, சிவணைந்த பெருமாள், பலவேசம், ஐயன் ஆதிநாராயணர், பேச்சிஅம்மன், அக்னி மாடன், பட்டாணி மாயாண்டி, முண்டன், மாடன், வன பேச்சி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 51 படப்பு போடப்பட்டு கொடை விழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா கடந்த 23ம்தேதி  துவங்கியது. இதையொட்டி மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று  காலை 6மணிக்கு திருச்செந்தூர் கடலில் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. 9மணிக்கு பால்குடம் எடுத்துவருதல், 10 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6மணிக்கு குடி அழைப்பு, நியம்சம் எடுத்து வருதல் நடந்தது. இரவு 10மணிக்கு சுடலை மாடசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கொடை விழாவான இன்று (25ம்தேதி) காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. நண்பகல் 12மணிக்கு மதியக்கொடை விழா நடக்கிறது. மாலை 6மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து பொங்கலிடும் வைபவம் நடக்கிறது. இரவு 12மணிக்கு சாமக்கொடை விழா நடக்கிறது. சுவாமி தீச்சட்டி ஏந்தி, அக்னி சட்டி எடுத்து ஊர் சுற்றி வந்து திரலைக்கு செல்லும் வைபவம் நடக்கிறது. கொடை விழாவில் 3நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள்  ஆறுமுகநாடார், தேரடிமுத்து, அக்தார் மோகன்ராஜ், முருகேசன் சட்ட ஆலோசகர் சரவணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: