உடன்குடி பள்ளியில் பண்பாட்டு வகுப்பு

உடன்குடி, செப். 25:  உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் இந்து சமய பயிற்சி வகுப்பு நடந்தது.   உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் பாரத மாதா சேவா சங்கம் சார்பில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு  2 நாட்கள் நடந்தது.  துவக்க விழாவுக்கு மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு இந்து சமய பெருமைகள், பாரத நாட்டின் பழம்பெரும் சாதனை, யோகா, சிலம்பம், கூட்டு  வழிபாடு, பாடல் குறித்து கற்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாரதமாதா சேவா சங்க நிர்வாகிகள் பிரேம், ரகுநாத் செய்திருந்தனர்.

Related Stories: