கோவில்பட்டி ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நாளை போராட்டம்

கோவில்பட்டி, செப். 25: கோவில்பட்டி  நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர்   அலுவலகத்தில் நாளை உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை   வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினரும், ஐந்தாவது தூண் அமைப்பு மற்றும் சமூக அமைப்பினரும் நாளை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்   உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.  இதையடுத்து இதுதொடர்பான சமாதான கூட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்   பரமசிவன் தலைமையில் நடந்தது. ஐந்தாவது தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம்,   மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை, ஐஎன்டியூசி   மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க வட்டாரச் செயலாளர்  ராமகிருஷ்ணன், ஐந்தாவது தூண் அமைப்பு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர். ஆனால், சுமூகத் தீர்வும் ஏற்படாததால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இக்கோரிக்கையை  வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு  போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கத்தினர் முடிவுசெய்துள்ளனர்.

Related Stories: