×

கவிழ்ந்த வேன் மீது லாரி மோதல்

பாலக்காடு, செப்.21: எர்ணாகுளத்திலிருந்து கோவைக்கு நேற்று வேன் ஒன்று பாலக்காடு வழியாக சென்று கொண்டிருந்தது. இடுக்கியை சேர்ந்த டிரைவர் விஜோ(35) வேனை ஓட்டினார். இதில் கண்ணுரைச் சேர்ந்த அஜித்குமார் (41) இரிஞ்ஞாலக்குடாவைச் சேர்ந்த ரிஜேஷ்(30), ஆலப்புழாவைச் சேர்ந்த ஜோசப் ெநல்சன் (41), விஜோ ஜார்ஜ் (35),உதயலால் (31) ஆகியோர் இருந்தனர். பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே அணக்கப்பாம்பு பகுதியில் வந்த போது டிவைடரில் மோதி சாலையின் குறுக்கே வேன் கவிழ்ந்தது. அப்போது கோவை அன்னூரிலிருந்து மைதா மாவு லோடு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்த வேன் மீது மோதியது. இதில் கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பாஸ்கரன்(50)படுகாயமடைந்தார்.


Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை