சிருஷ்டி கைவினைப்பொருள் கண்காட்சி துவங்கியது

கோவை, செப். 21: கோவை   அவினாசி சாலை சுகுணா திருமண மண்டபத்தில் சிருஷ்டி கைவினைப்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. கிராப்ட் கவுன்சில் தலைவர் ஜெய ரவி, இக்கண்காட்சியை துவக்கிவைத்தார். செயலாளர் சுஜினி  பாலு வரவேற்றார்.  கோவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடந்து வரும்  இக்கண்காட்சியில் மகேஸ்வரிஸ், சண்டீஸ், காஞ்சிபுரம், ஜோஜெட்டெஸ், கிரெப்ஸ்,  சிக்ணிகாரி, பெங்கால், காட்டன்ஸ், ஆந்திரா சேலைகள், படோலா சேலைகள் இடம்பெற்றுள்ளன. தவிர, ஆடவருக்கான ஆடைகள், ஆபரணங்கள், கிப்ட் பொருட்கள்,  வீட்டு அலங்கார பொருட்கள் என 100க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்கள்  இடம்பெற்றுள்ளன. அஸாம் முதல் கேரளா வரை உள்ள  கைவினை கலைஞர்கள் பலரும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளனர். நாளை மாலை வரை இக்கண்காட்சி நடக்கிறது.

Related Stories: