கோவை அரசு மருத்துவமனையில் சுற்றிய இருவர் பிடிபட்டனர்

கோவை, செப்.21: கோவை அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில்  ஒரு பெண், நோயாளிகளின் நகை, பணத்தை நோட்டம் விட்டு சுற்றி கொண்டிருந்தார். அதே பகுதியில் ஒரு வாலிபரும் சந்தேகப்படும் வகையில் சுற்றினார். இது தொடர்பாக பிரசவ வார்டிற்கு வந்திருந்த பொதுமக்கள் வார்டு செக்யூரிட்டிகளிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் சந்தேக நபர்களை தேடிய போது ஆள் நடமாட்டம் இல்லாத வார்டின் பின் பகுதியில் இருந்தனர்.

 செக்யூரிட்டிகளை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த செக்யூரிட்டிகள் ரோந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது அவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்களை போலீசார் மிரட்டி அனுப்பினர்.

இது தொடர்பாக ஜி.எச்சில் இருந்த பொதுமக்கள் கூறியதாவது: வார்டில் தூங்கி கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் நகை பறிக்க ஒரு பெண் முயன்றார். அந்த பெண் எழுந்து ெகாண்டதால் நகை பறிக்க முயன்ற ெபண் நைசாக நழுவி விட்டார். அவருடன் ஒரு ஆண் வந்திருந்தார். மேலும் இரண்டு பேர் வார்டிற்குள் நோயாளிகளை பார்க்க வருவது போல் சுற்றி கொண்டிருந்தனர். இவர்கள் தூங்கும் நபர்களை நோட்டம் விட்டு நகை, பணம் பறிக்க முயற்சி செய்தார்கள். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்ைகயும் எடுக்காமல் மன நலம் பாதித்தவர்கள் எனக்கூறி விரட்டி விடுகிறார்கள். நடவடிக்கை இல்லாத நிலையில் இவர்கள் மீண்டும் திருட வருகிறார்கள். கண்காணிப்பு கேமரா இருந்தும் இவர்கள் தைரியமாக திருடுகிறார்கள். இரு வாரம் முன்பும் இதேபோல் ஒரு நபர் பிரசவ வார்டில் புகுந்து நகை, பணம் திருட முயன்றார். அவரையும் மன நலம் பாதித்தவர்கள் என போலீசார் அனுப்பி விட்டனர். பிரசவ வார்டில் அத்துமீறும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்தால் தான் நோயாளிகள் நிம்மதியாக சிகிச்சை பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: