வால்பாறை அதிமுக பெண் எம்எல்ஏ செல்போன் திருட்டு

கோவை, செப். 21: வால்பாறை தொகுதி எம்எல்ஏவான கஸ்தூரி வாசு அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். இதற்காக, எம்எல்ஏ இடஒதுக்கீட்டில் முதல் வகுப்பு பெட்டியில் புக்கிங் செய்து பயணம் செய்ததாக தெரிகிறது.  இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது, அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த கஸ்தூரி வாசு பெட்டியில் இருந்து எழுந்து வந்தார். இதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர், கஸ்தூரி வாசு தனது பையை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர், எம்எல்ஏ தங்கியிருந்த முதல் வகுப்பு பெட்டிக்குள் நுழைந்தார். அப்போது, அங்கிருந்த எம்எல்ஏ பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். பின்னர், கழிவறைக்கு சென்று விட்டு அவரது பெட்டிக்கு எம்எல்ஏ சென்றார். அப்போது தனது பை காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான செல்போன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு எம்எல்ஏ உடனடியாக தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் சென்ைன சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. எம்எல்ஏ கஸ்தூரி வாசு ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: