அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை

அவிநாசி,செப்.21: இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல  அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை  கொடுத்தனர்.மனுவில் சிறுபூலுவபட்டியில் உள்ள சமூகநலக்கூடத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துதல்,  குழந்தைகள்,பெண்களை கேலி கிண்டல் செய்தும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். எனவே சமூக நலக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்.மேலும் 5வது வார்டு சௌபாக்கியாநகரில் கழிவுநீர் வீதியில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை வெளியேற்ற  புதியதாக கழிவுநீர்  சாக்கடை கால்வாயை அமைத்து பிரதான கால்வாயுடன் இணைக்க வேண்டும்.கீதா நகரில்  சாக்கடைக் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.

Related Stories: