கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், செப்.21: திருப்பூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.சத்துணவு ஊழியர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை அல்லது ஒட்டு மொத்த தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் ஓய்வூதியர்களுக்கு சட்ட ரீதியான குடும்ப ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். உணவூட்ட செலவினை மானியத் தொகையை ஒரு பயனாளிகளுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.   காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் எதிரே தர்ணா போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

முன்னதாக சத்துணவு ஊழியர்களின் பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.  கலெக்டர் அலுவலகத்தில் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துனை தலைவர் ஜெயமேரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஞானதம்பி,  தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர்முருகதாஸ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சக்தி நிறைவுரையாற்றினார். முடிவில் கருணாகரன் நன்றி கூறினார். இதில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: