திருமுருகன்பூண்டி சிற்ப கலைஞர்களுக்கு அடையாள அட்டை

அவிநாசி,செப்.21:பிரசித்தி பெற்ற  கல்சிற்பங்கள்,சாமிசிலைகள் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதிகளில்  வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதே போல பாத்திர உலோகம் மற்றும் கோபுர கலசம்,  பிரபாவளை உள்ளிட்ட உலோக சிற்பங்களுக்கும் அனுப்பர்பாளையம் பகுதியில்  தயாரிக்கப்படுகின்றது. இப்பணிகளைச் செய்யும் சிற்ப கலைஞர்கள் 220  பேருக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கைவினை  பொருட்கள் அபிவிருத்தி ஆணையத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாடு அரசின்  பூம்புகார் அமைப்பின் கீழ் ரூ.11 லட்சம் லட்சம் மதிப்பிலான இலவச  உபகரணங்கள் வழங்கப்பட்டது. சிற்ப கலைஞர்களுக்கு அடையாள அட்டை ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கியது. முன்னதாக சிற்ப தொழில் சங்க தலைவர் சிற்பி ராதாகிருஷ்ணன், சங்க  செயலாளர் யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் கைவினை பொருட்கள் அபிவிருத்தி  ஆணையத்தின் கள அலுவலக உதவி இயக்குநர் லட்சுமி, திருப்பூர் மாவட்ட தொழில்  மையம் உதவி இயக்குநர் திருமுருகன் மற்றும் தமிழ்நாடு கைவினை  தொழில்வளர்ச்சிக்கழகம் சேவியர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: