×

அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி 25ம் தேதி சேலம் வருகை

சேலம், செப்.21: சேலத்தில் அதிமுக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் 25ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார்.
அதிமுக சார்பில் வரும் 25ம் ேததி, மாவட்ட தலைநகரங்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதன்படி சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டை மைதானத்தில், மாநகர் மற்றும் புறநகர் அதிமுக சார்பில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 25ம் தேதி மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டத்தை தொடங்கி நடத்துகின்றனர். இதில், பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினம் காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்திறங்குகிறார். பின்னர், நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணிக்கு, பொதுக்கூட்ட மேடைக்கு வந்து, பேசுகிறார். கூட்டத்தை முடித்ததும், கார் மூலம் கோவை சென்று, அன்றைய தினம் இரவே சென்னைக்கு விமானத்தில் சென்றடைகிறார். கூட்ட ஏற்பாடுகளை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது