கணினி சேவை மையம் தானிய கிடங்கிற்கு மாற்றம் - சான்றுகள் பெறுவதில் சிக்கல்

தாரமங்கலம், செப்.21: தாரமங்கலம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வந்த  கணினி சேவை மையம், தானிய கிடங்கிற்கு மாற்றபட்டதால் பொதுமக்கள் சான்றுகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாரமங்கலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கணினி சேவை மையம் செயல்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள், மாணவ, மாணவிகள்மற்றும் பொதுமக்கள் பட்டா, சிட்டா, சாதி மற்றும் வருமான சான்றுகளுக்கு விண்ணப்பித்து, உடனுக்குடன் பெற்று வந்தனர். இந்த கணினி சேவை மையம், திடீரென அருகில் உள்ள தானிய கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சான்றுகளுக்காக பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தானிய கிடங்கு பகுதிக்கு செல்ல வேண்டுமானால், திறந்த நிலை சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் முதியோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.எனவே, சேவை மையத்தை பழையபடி தொடக்க வேளாண் கடன் சங்கத்திலேயே செயல்பட அதிகாரிகள் நடடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கணினி சேவை மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கூட்டுறவு கடன் சங்கத்தில் செயல்பட்டு வந்த அலுவலகம் வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தது. சங்க நிர்வாகிகள் இடவசதி குறைவு என கருதி மாற்றி இருக்கலாம்,’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: