×

இடைப்பாடி தாலுகாவில் மாணவிகள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

இடைப்பாடி, செப்.21:  இடைப்பாடி தாலுகாவில் இடைப்பாடி ஏரி ேராடு, செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, வெள்ளரிவெள்ளி ஆகிய பகுதிகளில் ஆதி திராவிடர் மாணவிகள் நல விடுதி, பிற்பட்டோர் மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில், நேற்று சேலம் கலெக்டர் ரோகிணி திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் குப்பை மற்றும் தேவையில்லாத பொருட்களை உரிய இடத்தில் போட்டு தூய்மையை கடைபிடிக்க வேண்டும் எனவும், தினந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
 ெதாடர்ந்து சமையல் பெண்கள் மற்றும் உதவியாளர்களிடம், உணவு பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் பராமரிக்க கேட்டுக்கொண்டார். மேலும், மாணவிகளுக்கு ஏதேனும் தொல்லை இருந்தால், விடுதியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் எனவும், அதில் உள்ள புகார்கள் மீது அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். பின்னர், மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், இடைப்பாடி தாசில்தார் கேசவன், நகராட்சி ஆணையாளர் முருகன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், இடைப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா, ஆர்ஐ பிரபு, மண்டல துணை தாசில்தார் கோமதி ஆகியோர் உடனிருந்தனர்.



Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்