×

5 நாளுக்கு பின் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

மேட்டூர், செப்.21: மேட்டூர் அனல் மின் நிலைய 2வது பிரிவில் 5 நாட்களுக்கு பின் மீண்டும் நேற்று மின் உற்பத்தி தொடங்கியது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உள்ள முதல் பிரிவில், தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. முதல் பிரிவில் உள்ள 2வது அலகில், கடந்த 5 நாட்களுக்கு முன் நிலக்கரி பற்றாக்குறையால் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 3வது பிரிவிலும், நேற்று முன்தினம் இரவு 2வது பிரிவிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1440 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின்நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு பின் நேற்று காலை முதல் பிரிவில் உள்ள 2வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. மேலும் அனல் மின் நிலையத்திற்கு வரும் நிலக்கரி அளவை பொறுத்து மற்ற பிரிவுகளும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டூர் அனல் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்