வைகை கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாழப்பாடி, செப்.21: வாழப்பாடி அருகே, வைகை கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வைகை கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், பெண்களின் வாழ்வியலுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் வீரமணி, பாலாஜி நிறுவனத்தில் பணிபுரியும் அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அருண் பேசுகையில், சுகாதாரமான மூலிகை நாப்கின்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், தரமற்ற நாப்கின்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்து கூறி அதற்கு செயல்முறை மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், பேராசிரியர்கள், வைகை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: